Wednesday, January 30, 2008

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க வந்த திராவிடம்

ஒரு சிலர் இப்போது தமிழ் தேசியம் பேசுபவர்களை இவங்க பார்ப்பனீயர்கள் என்று முத்திரை குத்த துவங்கியிருக்கிறார்கள், காரணம் இவர்கள் பேசும் இல்லாத திராவிட தேசியத்தை குறை சொல்வதால் தான். அதையும் மீறி நாம் பேசினால் தேசியமே தவறு முதலாளித்துவம் என்கிறார்கள். தேசியமே பொய் என்றால் எதற்காக திராவிடம் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துகிறீர்கள்? ஆந்திரனும், கண்ணடனும், மலையாளி தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக்கொள்வதில்லை என்கிறீர்கள், அவர்கள் அழைத்துக்கொள்ளவில்லை என்பதால் நாங்கள் எங்களை அழைத்துக்கொள்ள வேண்டுமா? எங்களது தமிழன் என்ற அடையாளத்தை எதற்காக இழக்கவேண்டும். மற்றவர்கள் ஏற்காத திராவிடர் என்ற அடையாளத்தை எங்கள் மீது தினித்து எங்களின் மறைவில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கண்ணடர்களும் வாழ்ந்துகொள்ளத்தான் இந்த ஏற்பாட்டை தமிழகத்தில் உள்ள பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள். அண்டை மாநிலத்தில் திராவிடமும் இல்லை, திராவிடத்தை பேசும் மனிதர்களும் இல்லாத போது தமிழர்களின் அடையாளத்தையும் மொழியையும் அழிக்கவே இந்த திராவிட கழகத்தினர் முயற்சிக்கின்றனர். அதில் ஒரு திட்டமாக தற்போது தமிழர்களையே பார்ப்பனர்களாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது இந்த வெளி மாநில கையேந்தி கும்பல். நாங்கள் தட்டேந்தும் பார்ப்பன கும்பலும் அல்ல அடுத்தவரை சுரண்ட வந்த ரஜினி, மார்வாடி கும்பலும் அல்ல. உண்மையில் ஆந்திரர்களையும், மலையாளிகளையும், கண்ணடர்களையும் தொங்கும் தி.க கும்பல் மார்வாடிகளை மட்டும் வெறுப்பது ஏன் என்பது புதிராகவே உள்ளது. அதிர்ஷட கற்கள் விற்பதால் என்றால் மற்ற மாநிலத்தவர் மட்டும் யோக்கிதமாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியுமா? ஆந்திரர்கள் கூட பெரும்பாலும் விபாச்சாரத்தை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். விபச்சாரத்தை ஆதரிப்பதைவிட ஆண்களும் யோக்கியதையாக இருக்கவேண்டும் என்று கூட சொல்லலாமே. இப்படி தமிழ்தேசியம் பேசுபவர்களை பார்ப்பனீயர்கள் என்று பேசி தமிழர்களுக்குள்ளேயே "திராவிட தமிழர்கள்" "பார்ப்பன தமிழர்கள்" என்று பிரிக்கும் முயற்சி நடக்கிறது. இவர்களுக்கு இப்படி ஒரு எடுத்துக்கொடுக்கும் வேலையை தான் "சுப.வீ " செய்கிறார். அதென்ன "திராவிட இயக்க தமிழர் பேரவை" அதாவது திராவிடர் அல்லது பெரியார் கருத்துள்ள தமிழர் பேரவை அல்லது திமுக இயக்கி வைக்கும் தமிழர் பேரவை என்று எடுத்துக்கொள்ளலாம். விஜயகாந்த் வைத்துள்ள பெயரும் இப்படித்தான் தே.மு.தி.க இந்தாளுக்கு பெரியாரின் கருத்துக்களில் பாதிக்கு மேல் நம்பிக்கையில்லை அப்படியிருக்க தே.மு.தி.க ஒரு கவர்ச்சி பெயர் தானே ஒழிய கொள்கை பெயர் அல்ல.
பழ. நெடுமாறன் பாசிச பா.ஜ.க, இந்து முன்னனி, யுடன் கூட்டு சேர்வதோ எவ்வள்வு ஆபத்தோ அதைவிட ஆபத்து இந்த தமிழர்களை திராவிடர்களாக்கும் முயற்சி. எனவே சுப.வீ தமிழர்களை திராவிடர்களாக்கும் முயற்சியில் திராவிட இயக்க தமிழர் பேரவை என்று ஆரம்பிக்காவிட்டாலும் திமுகவின் எடுபிடி இயக்கமாகவும், கருணாநிதி புகழ்பாடும் இயக்கமாகவும் ஆகிவிட்டது. தமிழர் தேசிய இயக்கம் என்று கூறிவிட்டு தமிழ்தேச விடுதலையை பற்றி பேசவோ போராட்டமோ புரட்சியோ நடத்தாமல் ஈழத்தமிழர் மட்டுமே பேசுவது பயணளிக்காது என்று விமர்சிக்கும் தி.க வினரும் தமிழர் நலன் பேசாமல் தமிழர்களை திராவிடர்களாக்கும் முயற்சி தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்பை எடுத்துக்கொண்டு தமிழர்கள் இந்திய தேசிய கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு ஒரு கூட்டுடமை தேசியமாக தமிழின் ஆட்சியில் இயங்கி தமிழர் நலனை காப்பதுவே முழுமையான தமிழ்தேசியமாகும். பழ. நெடுமாறன் இங்குள்ள சட்டங்களுக்கு அஞ்சி, மக்கள் பேராட்டத்திற்கு முன் வரமாட்டார்கள் என்று தான் புலிகளின் ஆயுத போராட்டத்திற்கு பின் தமிழ்தேசிய விடுதலையை அடையலாம் என்று காத்திருக்கிறார், இது ஒரு சாதுர்யம், காத்திருப்பே ஒழிய இயலாமை அல்ல. அதே சமயம் தமிழ்தேசிய விடுதலை முன்னெடுப்பை மேற்கொண்ட புலவர் கலியபெருமாள், மாறன், பின்னர் வீரப்பனையும் ஆதரித்து இருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் ஒரு முதியவர் ஒரு தேசத்தின் விடுதலை போராட்டத்திற்காக துப்பாக்கி தூக்க முடியாது. பிரச்சாரத்தின் மூலம் கருத்துக்களை பரப்பி விழிப்புணர்வு மற்றும் எழுச்சியை மட்டுமே ஊட்டமுடியும். அந்த வகையில் தமிழ்தேசிய கருத்து அனையாமல் இருப்பதற்கு பழ.நெடுமாறன் ஒருவர் மட்டுமே காரணமாக இருக்கிறார். அதனாலேயே அவரை பல தி.க வினர் தாக்கி பேசி வருகிறார்கள், திருமாவளவன், வைகோ, மற்றும் ராமதாஸ் ஆகியோரும் அதே கருத்தில் அரசியல் நடத்துபவர்கள் அதனாலேயே அவர்களையும் அரசியல் கடந்து விமர்சிப்பது பொதுவான விசங்களில் குற்றம் சுமத்துவது நியாயமாகுமா? ஆனால் தமிழ் தேசிய கருத்தை உயரப்பிடித்த கொளத்தூர் மணி வீரப்பனின் வீழ்ச்சிக்கு பிறகு தமிழ் தேசிய கருத்திற்கு எதிரான திசையில் திரும்பி திராவிட கருத்தில் தமிழர் நலனையும் பெரியார் கூறிய "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தையும் மறந்தது எப்படி என்பது தான் புரியவில்லை.

தமிழர்களின் வாழ்விலே மூடநம்பிக்கை இருந்தது உண்மை அதுகூட எப்படி பாதி நன்றியுணர்வு, பயம் ஆகியவற்றால் ஏற்பட்டதே வணக்கம் செலுத்தும் முறை. தமிழர்கள் வணக்கம் என்பதற்காகவும், நன்றி சொல்வதற்காகவுமே கைகூப்பியுள்ளனர் அடுத்தபடியாக அச்சத்தை ஏற்படுத்தி கொலை, கொள்ளையை தடுக்க வணங்க்யுள்ளனர். ஆனால் இந்த சொற்ப மூடப்பழக்கத்தை ஒழிக்க தமிழரின் வரலாறு, பண்பாடு இவற்றையே துறக்கவேண்டுமென்றால் என்ன நியாயம்? திராவிடருக்கென்று என்ன கலாச்சாரம் இருக்கிறது? என்ன வரலாறு இருக்கிறது. தமிழன் என்ற சொல் வரலாற்றில் இருந்து நீக்கப்பட்டால் தமிழரின் வரலாறு இல்லை. திராவிடன் என்றால் அவன் இடையில் வந்த பார்பனனுக்கு எதிரான ஒரு இனத்தவன் என்று வரலாற்று பிழை ஏற்படும் வாய்ப்பு தான் அதிகம். தமிழர் தன் அடையாளத்தை இழந்து, பண்பாட்டை இழந்து, வரலாறு அழிந்த கூட்டமாக ஒற்றுமை அற்று திசைக்கு ஒருவறாக அலையவேண்டும் என்பதே திராவிடர் கழகங்களின் நோக்கமாக இருக்கிறது. இவர்களின் உறுத்தல்கள் என்னவென்றால் தமிழ் கலாச்சாரம் என்று கற்பை பாதுகாத்து பெண்களை அடிமை செய்கிறார்கள், வரலாறு என்று சொல்லி கோயிலையும் கோபுரத்தையும் காத்து சாதி, மதங்களை வாழ்வைக்கிறார்கள் என்பது தான். சாதி மதத்தை ஒழித்து மக்களை ஒன்றுபடுத்துவதும் சமத்துவம் கான்பதும் வரவேற்கத்தக்கதே. ஆனால் தமிழர்களின் கட்டிட திறமைகளை வெளிப்படுத்தும் கோபுரங்களை சாய்க்க வேண்டியதில்லையே. கற்பு என்ற கட்டுப்பாட்டை ஒழித்து ஆண், பெண் பேதத்தை நீக்குவோம் அதற்காக கட்டுபாடற்ற மேலைநாட்டு கலாச்சாரத்தை ஏன் நாம் தழுவி அழவேண்டும், குடும்ப அமைப்பை சிதைக்க வேண்டும்? நண்மை செய்கிறோம் புரட்சி செய்கிறோம் பேர்வழிகள் என்று இப்படி அழிவுகளில் தமிழையும் ஏன் பாழ்படுத்தியழிக்க வேண்டும்? தமிழர்கென ஒரு குணம் இருக்கிறது, அது தான் மனித நேயம், அதை ஏன் அழிக்கவேண்டும். தமிழ் எனும் இனிய மொழியை ஏன் மேற்கத்திய நாகரீகத்தின் பெயரால் அழித்து ஒழிக்க வேண்டும்?

No comments: