Wednesday, January 30, 2008

திசை மாறும் திரவிடர் கழகம்

திராவிடர் கழகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது தனி மனித ஒழுக்க கோட்பாடுகளுக்கு எதிராக போராட துவங்கியிருக்கிறது. குஷ்புவிற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க திராவிடர் கழகங்கள் ஆதரவு தெரிவிக்க அதுவரை தமிழ் இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இருந்த நல்லுறவு அறுந்து தொங்க ஆரம்பித்துவிட்டது. பரஸ்பரம் தாக்க ஆரம்பித்துவிட்டனர். ம.க.இ.க வுடன் பெ.தி.க நெருங்க ஆரம்பித்ததிலிருந்து தமிழை தூக்கிபிடித்து தமிழ் தேசிய ஆதரவு பேசி வந்த பெ.தி.க தற்போது தமிழ் தேசிய கருத்தை விடுத்து தேசியத்திற்கு எதிரான ம.க.இ.க வின் தத்துவத்தை தழுவி கொண்டிருக்கிறது. நாடு, மொழி, தேசம் கடந்த நல்லுறவு என்று பெரியார் பேசினாலும் தமிழர் நலனுக்காவே போராடினார், அப்படியிருக்க பெரியார் ஏன் தன் இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயரிட்டார் என்று கேள்வி எழுப்ப, பெரியாரின் நாடு, மொழி, தேச பற்று மறுப்பை மீண்டும் பெ.தி.க தூக்கிபிடித்திருக்கிறது. நாடு, மொழி, தேசம் கடந்த பற்று என்ற பெரியார் மனித நேயத்தை தான் குறிப்பிட்டார் என்றாலும் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினார். பெரியார் எடுத்த "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கொள்கையை வலியுருத்தி அதன் அடியொட்டியே இயங்க போவதாக தான் த.பெ.தி.க வின் துவக்க மாநாடு தமிழ்நாடு வரைபடத்திற்குள் பெரியார் இருப்பதை போல மேடையில் படம் வரைந்திருந்தனர். பெரியார் இந்திய தேசப் படத்தை கொளுத்தும் போது கூட தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப் படத்தை கொளுத்துவோம் என்றார், இந்த போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் தான் உண்மையான தேச பக்தர்கள் என்றார். ஆனால் இப்போது தேசியம் தேச பக்தி என்பதையே பெ.தி.க மறுக்கிறது. இந்த என்ன மாயை என்று புரியவில்லை. அந்த மாநாட்டிலேயே கூட கருநாடக த.பெ.தி.க பிரதிநிதிகளாக சிலர் கலந்துகொண்டனர். ஆனால் மேடையில் இருந்த பெரியாரோ தமிழ்நாட்டு வரைபடத்திற்குள் அடைக்கப்பட்டிருந்தார். தேசியமே இல்லை என்ற பெரியார் ஏன் தமிழ்நாடு வரைபடத்திற்குள் அடைக்கப்பட்டார் என்று புரியவில்லை. அதுபோல தமிழ்தேச விடுதலை இயக்கத்தின் மாறனுக்கு பல வகையில் உதவி புரிந்ததாக கொளத்தூர் மணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொளத்தூர் மணியும் பல மேடைகளில் மாறனின் தமிழ் தேசிய கருத்துக்கும் மாறனுக்கும் ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். மாறன் போன்றவர்களை ஏன் தேடி பிடித்து கைது செய்கிறார்கள் என்று பல கோணங்களில் பேசியிருக்கிறார். தமிழ் ஈழமும் தனித்தமிழ்நாடும் அமைந்தால் ஒழிய தமிழர்களுக்கு விடுதலை இல்லை என்று பேசி வந்த திராவிடர் கழகங்கள் தற்போது நழுவிக்கொண்டிருப்பது ஏன்? மாறனோ இந்திய தேசிய இராணுவம் உள்பட மத்திய அரசின் அனைத்து துருப்புகளும் 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தை விடுத்து ஓடவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தவர். ஆரம்ப காலங்களில் நக்சல்பாரிகளிடம் பயிற்சி பெற்றவர்களும், அந்த இயக்கங்களின் சித்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவர்களே பின்னர் தமிழ்தேசிய கருத்தமைந்து புலவர் களியபெருமாளின் தலைமையில் இயங்க தமிழ்நாடு விடுதலை இயக்கத்தினர். ஆனால் அதே நக்சல்பாரி இயக்கத்திலிருந்த அ.மார்க்ஸ் தான் தேசியத்தை எதிர்ப்பவர். சில காலம் முன்பு வரை தமிழ்தேசிய கருத்துக்களையும் தலைவர்களையும் ஆதரித்த கொளத்தூர் மணி தற்போது ம.க.இ.க வையும் அ.மார்க்சையும் ஆதரித்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால் பெ.தி.கவில் தெளிவு இருப்பதாக தெரியவில்லை.
இப்போது அரசியல் கட்சிகளை போல பெரியாரின் திராவிடர் கழகங்களும் எதிரிகளின் அன்றாடம் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் லாவணி அரசியல் நடத்த ஆரம்பித்துவிட்டது. குஷ்புவிற்கு அதரவு தெரிவித்ததையே தனக்கு பேச்சுக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்து குஷ்பு ஏதோ தான் ஒட்டு மொத்த இந்தியாவின் பெண்ணுரிமை தேவதை போல போகிற வருகிற இடங்களிலெல்லாம் சிறிதும் பொறுப்பும் நாகரீகமும் அறியாமல் குதித்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு புறம் விவரங்கள் இப்படியிருக்க வெகுவேகமாக உலகமயமாகி வருவதால் தேசிய கருத்தே உடைபடும் நிலையில் தான் இருக்கிறது. இனி உலகமே ஒரு தேசம், ஒரே வகையான பணம் என்றாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இனி இந்தியா, அமெரிக்கா, பிருத்தாணியா ருசியா என்றல்லாமல் ஒரே தேசமாகி, சாதி, மதங்களற்ற நாடாக உருவாகும் காலம் இன்னும் சில நூறு ஆண்டுகளில் அமைந்துவிடும். இனி மக்கள் தமிழ்நாடு பாலிடிக்ஸ் பேசமாட்டார்கள் இனி உலகமே ஒரு சட்டத்தின் கீழ் ஆளப்பட்டு கல்வியறிவும், செயல்திறமும், ஆதிக்க சக்தியும் உள்ள பணக்காரர்களால் படிப்பறிவற்றவர்கள், ஏழைகள் அடிமைபடுத்தபடுவார்கள். பணத்திற்கு அடிமையாகும் குணம் படித்தவர்களை அடியாக்கும், எனவே பணமும் பண முதலைகளுமே உலகாளும் காலம் வந்தே தீரும். எனவே தேசிய சித்தாந்தத்தை உடைப்பதின் மூலம் அ.மார்க்ஸ் போன்றவர்கள் ஆதிக்க சக்திகளின் வேலையை சுலபமாக்கி வருகிறார்கள். பிராந்திய ரீதியான ஒற்றுமை ஆதிக்க சக்திகளையும் இந்திய அரசை எதிர்க்க அதே அளவு பிராந்திய சக்திகளின் கூட்டு சக்தி அவசியம் என்று அவர்கள் கூறலாம். ஆனால் இந்த கருத்து உலகமயம் என்ற கருத்துடன் ஒத்துபோவதானால் இதை சட்டத்தின் தயவில் ஓங்கி நிற்கும் அரசின் அடுக்குமுறைக்கு முன்னால் இயக்கம் நிற்காமல் வெரும் கருத்து நிலைத்து உலகமயத்தின் ஏற்பாட்டிற்கான கருத்தியல் ஒற்றுமையையே காட்டுகிறது. ஒருவேளை உலகமயமாக்கலை இனி தடுக்கமுடியாது என DYFI யை போல பெயரளவில் எதிர்ப்பு காட்டிவிட்டு, உலக அளவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை ஈர்க்கும் உறவுகளை ஏற்படுத்தும் திட்டமாக அமைந்தாலும். உலகமயம் என்பதை தடுக்க தேசியமே சிறந்த வழி. ஆனால் தமிழகத்தில் வாழும் பிறமொழி, பிற மாநில இளைஞர்கள் சிலர் பெரியார் என்ற திராவிட குடையை பிடித்துக்கொண்டு வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் அதற்கு வலுவான வார்த்தை திரவிடர் என்பதை முன்னிறுத்தி தமிழ் என்பதையே ஒழித்துக்கட்டி, இங்கே தெலுங்கர்கள் பதுங்க முயற்சிக்கிறார்கள். இப்படி திராவிட கோஷம் எழுப்பும் சிலர் விஜயகாந்த் என்னும் தெலுங்கனின் "தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்" என்பதற்கு என்ன விளக்கம் என்று கூறவேண்டும். விஜயகாந்த்திற்கு தன் கட்சி தேசிய கட்சியா திராவிட கட்சியா என்று கூற துப்பில்லை. ஒன்றும் மட்டும் உறுதி இந்த தெலுங்கர்கள் இந்த விஜயகந்தை ஆதிர்ப்பதின் மூலம் இவர்கள் திராவிடம் பேசுவது தமிழை அழிக்கவும் தமிழ்தேசியம் பேசும் ராமதாஸை எதிர்க்கவும் தான் என்பதை புரியாத கேனையர்களாக தமிழர்கள் இல்லை என்பது உறுதி.

தேசியமே கூடாது என உலகமய கொள்கைக்கு பச்சைக்கொடி பிடிக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் எதற்காக பார்ப்பனர்களை மட்டும் தூற்றி பேசவேண்டும்? பார்ப்பனீய குணம் பார்ப்பானிடம் மட்டும் தான் இருக்கிறதா? வேளாளர்களிடம் இல்லையா? முதலியாரிடம், செட்டியாரிடம்
வன்னியரிடம் ஏன் தலித்திடம் இல்லையா. ஒரு தலித் தாசில்தாராய் இருந்தாலும் அவரிடமும் பார்ப்பனீயம் குடிகொண்டுவிடுகிறது. பணம் இருக்கும் பலரும் ஆதிக்க குணம் படைத்த பார்ப்பனீயர்கள் ஆகிவிடுகிறார்கள். நாம் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் பார்ப்பனர்கள் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் பிற மாநிலத்தவர்களும் தான் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள், வளங்களை சுரண்டி செல்கிறார்கள் அப்படியிருக்க பார்ப்பனர்களை மட்டும் ஏன் எதிர்க்கவேண்டும். 300 ஆண்டுகளாக இருக்கும் ஆந்திரர்கள் என்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் பார்ப்பனர்களை மட்டும் ஏன் எதிர்க்கவேண்டும்? ஏன் துரத்தவேண்டும்? பார்ப்பனர்கள் மனுதர்மத்தையும், வேதங்களையும் தினித்து நம்மை அடிமைபடுத்தினார்கள் சுரண்டினார்கள் என்றால் இன்று நம் பங்காளிகள் என்று சொல்லும் பல இனத்திலும் ஆதிக்க சக்திகள் இருக்கிறார்கள். அது ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்த், ரஜினிகாந்த் என பல இனத்திலும் இருக்கிறார்கள், இவர்கள் அனைவருமே சமத்துவம் பேசிக்கொண்டே சொத்துக்குவிப்பர்கள். குண்டர்கள் என்று சொல்லிக்கொண்டே குண்டர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள் தானே, இவர்களிடம் இருந்து என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இங்கே ஒரு இனம் தமிழினம் இருக்கிறது, இங்கே வாழ தமிழினத்திற்கு மட்டுமே உரிமை உண்டு. ஆந்திரர்களுக்கு வாழ்வாதாரம் ஆந்திராவில் இல்லை என்றால் போராட வேண்டுமே தவிர இங்கே ஓடிவரக்கூடாது. ஈழத்தமிழர்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் மொழியாலும், இனத்தாலும் தமிழர்கள் எங்களின் தொப்புள்கொடி உறவுகள். ஆந்திரனோ, கண்ணடனோ, மலையாளியோ அப்படியல்ல, இங்கே எத்தனையோ உழைப்பில்லாமல் சுரண்டி சேர்க்கும் வெளிமாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வெளியேறியே ஆகவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். மனிதநேய பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், உழைப்பளிக்காவும் காட்டலாம். ஆனால் அவர்கள் தமிழ் மொழியையே வீட்டுமொழியாக பேசி தமிழ்நாட்டிலேயே வாழ தயாராக இருக்கவேண்டும். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு உறுதுனையாக இருக்கும் அறிவுஜீவுகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக தமிழகத்தில் உழைக்கும் மக்களுக்கு அடைக்கலமும் குடியுரிமையும் கொடுக்கலாம் ஆனால் மேற்குறிப்பிட்ட மொழிக்கொள்கையையும், மேலும் தமிழக குடியுரிமை சட்டத்திட்டத்திற்கு கட்டுபட வேண்டும்.

தற்போது தமிழர்களான முஸ்லிம்களை சிறுபாண்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில் வேற்று மாநிலத்தவரை ஆதரிக்கும் ம.க.இ.க வும், தி.கவும் ஆதரித்து இவர்களின் ஆதரவை பெருக்கிகொண்டு வருகிறார்கள். இப்படி திரவிடத்தின் பெயரால் வேற்று மாநிலத்தவர்கள் இங்கே கொடிகட்ட பார்ப்பது தமிழர்களுக்கு ஆபத்தாகவே முடியும்.

No comments: