Wednesday, February 13, 2008

தோழர் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நலமறிய ஆவல். தாங்கள் மோடி, ஜெயா வை பற்றி தெரிவித்த கருத்துக்களில் எமக்கு வேறுபாடு ஏதுமில்லை. ஆனால் அந்த பார்ப்பனீய சக்திகள் மக்களை பல்வேறு குழுக்களாக மாற்றியிருக்கிறார்கள் மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், கீழ்தரமக்கள், அடிமைகள் என பல குழுக்களாக பிரித்து ஏமாற்றிகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பணியிலும், சமத்துவத்திலும் நாட்டமில்லை, மாறாக பணம், உடலுழைப்பில்லாத சுகவாழ்வு இதை தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், மக்களிடம் சமநீதியான வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் செயல்படவேண்டும், ஆனால் அரசு முதலாளித்துவத்தின் பினாமிகளாக இருக்கும் வரை இது சாத்தியமல்ல. நாம் தேர்தலை புறகனித்து ஒரு மக்கள் புரட்சியை நடத்தி மக்களாட்சியை நிறுவ வேண்டும் என்பதில் வேகம் காட்டவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் புரட்சி தீ கனல்விடாத வண்ணம் அரசு அடக்குமுறையை சட்டத்தின் பெயரால் கட்டவிழ்த்துவிடுகிறது. இதற்கு அஞ்சி மக்கள் இப்படிபட்ட போராட்டங்களில் பங்கெடுப்பதில்லை. ஒன்று மறுக்கமுடியாத உண்மை எந்த போராட்டத்திலும் பெரும்பாண்மையான மக்கள் ஏதேனும் ஒரு வகையில் பங்கெடுக்காவிடில் அந்த போராட்டத்தின் முழு பலனையும் அடையமுடியாது. இன்றைக்கு நாடே காலணியாகி வரும் வேளையில், இந்த மக்கள் அடிவருடி வாழ்வு தேட தயாராகிவிட்ட நிலையில் நாம் யாருக்காக போராடுவது? சரி மக்களை மாற்றுவோம் என போராடினாலும் அதற்கு என்ன பலன் இருக்கிறது. இளைஞர்கள் வெறும் கொள்கையற்ற நடைபிண்டங்களாக வாழும் ஊரில்? நானும் சொந்த ஊரில் வாழ்ந்து அதாவது மேட்டூரிலேயே வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அரசு வேலையோ, பொறுத்தமான தனியார் வேலையோ கிடைக்கவில்லையே. இன்னும் சொல்லப்போனால் என் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையைவிட குறைவான ஒரு பதவியிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். ஏன் நம்மால் எந்த ஒரு அரசியல்வாதியை காட்டிலும் சிறப்பாகவும், திறமையாகவும், துடிப்பாகவும் செயலாற்றமுடியும், அப்படியிருக்க ஒரு மக்கள் விரோத சுயநல அரசியல் குண்டர்களின் ஆளுமையில் நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். இதற்கு என்ன மாற்று தோழா? நாம் இருவரும் விவாதிப்பதில் ஒரு பலனும் இல்லை. எந்த தாமதமும் இன்றி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும். 24 மணி நேரமும் ஓயாத அலைகளாக மக்கள் புரட்சியுத்தத்தை நடத்தினால் மட்டுமே நாம் விரும்பும் சனநாயகத்தை ஏற்படுத்தமுடியும். அதுவரை விடியல் இல்லை தோழா, தங்களின் விவாதங்கள் வரவேற்கதக்கதே ஆனால் பெருவாரியான மக்கள் இனைந்து களப்பணியாற்றினால் மட்டுமே நாம் விரும்பும் மாற்றத்தை நிகழ்த்தமுடியும். தற்போதைய சமூக கவலையால் நமக்கு மிஞ்சியது வெறும் சமுதாயத்தின் மீதான கவலையும் அதனால் நம் வாழ்வு மீதான வெறுப்பும், அன்றாட வாழ்வின் இனிமைகள் மீது ஒரு விதமான அலட்சியமும், தனிப்பட்ட வாழ்வில் விரக்தியும் தான். இந்த மன உளச்சல்கள் என்னை இளம் வயதிலிருந்து வெகுவாக பாதித்திருக்கிறது, இதே காரணத்தால் நான் எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபடமுடியாமல் ஒருவித கவலையுடனேயே காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறேன். நமக்கெதிரே விகார வடிவெடுத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனீய மற்றும் முதலாளித்துவ கொடுமைகளுக்குள்ளேயே பலரும் வாழ்ந்து பழகிவிட்டனர். இனி இந்த நிலையை மாற்ற மிக பெரியதொரு நீண்ட புரட்சி யுத்தத்தை நடத்த வேண்டியிருக்கும். அப்படியொரு யுத்தத்தை தொடங்கவே நீங்கள் சொல்லும் கால நேரம் வரும் வரை காத்திருக்க எமக்கு பொறுமையில்லை. ஒன்று யுத்ததில் கலந்துகொண்டு போராடவேண்டும் இல்லாவிடில் ஒரு நிம்மதியான வாழ்வையேனும் கண்ணை மூடிக்கொண்டு வாழவேண்டும். அப்படி கண்ணைமூடிக்கொண்டு வாழ்வதால் நிம்மதியிருக்குமா? என்று நீங்கள் கேட்கலாம். இருக்காது ஆனாலும் இந்த வெறுப்பில் இருந்து விடுபடலாம் அல்லவா?

தோழா நீங்கள் தமிழ்மணி என்பவரின் வளைப்பதிவிற்கு எதிர்வினை எழுதமாறு கேட்டபோது எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. உண்மையில் நான் ஒரு கூட்டுடமை தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய அதன் பரினாமத்தையும், பல்வேறு நாடுகளில் நடந்த கம்யூனிச புரட்சியை முழுமையாக புரிந்தவனோ அல்ல. அப்படியிருக்க அந்த நபர் கம்யூனிஸ்டுகளை ஏதோ முழுமையாக அறிந்தவனைப்போல உலகின் பல்வேறு மூலைகளில் நடந்த பிரச்சனைகளை எடுத்துரைக்கிறான். அதில் எது உண்மை எவ்வள்வு உண்மை என்பதை நாம் அறியாமல் எதிர்பதிவையோ மறுப்பையோ பதிவு செய்யமுடியாது அல்லவே. குறிப்பாக அந்த விவகாரத்தைப்பற்றி என்ன மறுப்பு கூறாலாம் என்பதைவிட அந்த கூட்டத்திற்கு மக்களை திரட்டி நமது நிலையை வலுவாக எடுத்துக்கூறுவதே வெற்றி. இவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அது நம் காலவிரயம் என்பதே எமது கருத்து தோழா.மேலும் நான் இனையத்தளத்தை ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாகவே பார்க்கிறேன், மற்றப்படி உழைக்கும் மக்கள்புரட்சி என்பது இனையதளத்தில் என்ன இருக்கிறது. வளைப்பதிவர்கள் எவ்வளவு பேர் களப்பணியாளர்களாக இருக்கிறார்கள். நீங்கள் வெளியிட்டிருக்கும் போராட்ட அறிவிப்பும் சரி, அதைப்பற்றி தமிழ்மணி என்பவர் எழுப்பியிருக்கும் வினாக்களும் சரி இரண்டுமே நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் அப்படியிருக்க அந்த நபரை சட்டை செய்து நாம் எதையும் எழுதிக்கொண்டிருக்க தேவையில்லை. எனக்கு தெரிந்த வரை எந்த இயக்கத்திற்காகவும், கட்சிக்காகவும் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் ஒரு பற்றாளனாக என்னைப் போண்றவர்கள் எழுதுவது வெரும் விளம்பரத்திற்காகவும், பாராட்டுதலுக்காகவுமே இருக்கிறது. என்னையே நான் ஒருமுறை நான் எழுதுவதில் எவ்வளவு நடைமுறைபடுத்தியிருக்கிறேன் என்று கேட்டால் மிக குறைவே. அப்படியிருக்க வெற்றுக்கூச்சலால் என்ன பயன் தோழா? செயலில் இறங்கவேண்டும் தோழா, நமக்கு இருக்கும் குடும்ப பற்று சுகவாழ்வை துறந்து மக்களை திரட்ட, போராட, உண்மையான கூட்டுடமை தத்துவத்தை நிலைநிறுத்த நான் என்றுமே தயாராக இருக்கிறேன். நான் ஒரு தனியாளாக போவதைக்காட்டிலும் ஒரு தோழானவது தோழமைக்கு வேண்டும். அந்த தோழமை கிடைக்கும் வரை இப்படி கூச்சல் போட்டுக்கொண்டிருக்க வேண்டியது தான். அந்த தோழமை நீங்களாக இருந்தால் கூட நாம் இப்போதே போராட்டத்தை தொடங்கலாம். சோற்றைப்பற்றி தினமும் கவலைப்பட்டால் எதையும் சாதிக்கமுடியாது. ம.க.இ.க வில் ஒரு உறுப்பினராக இருக்கும் நீங்கள் யாருக்காக வேலை பார்க்கிறீர்கள் என்று பார்த்தால் நாம் எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது புரியும், இதனாலேயே நான் வசதியாக எந்த இயக்கத்திலும் சேருவதில்லை. குறைந்தபட்சம் அந்த இயக்கங்களின் பேரையாவது கெடுக்காமல் இருக்கலாம் அல்லவா? எனவே நாம் முழுமையான புரட்சியாளனாக மாறினால் தான் மக்கள் புரட்சி பேசுவதிலும் ஒரு நியாயம் இருக்கும்


ம.க.இ.க - பெ.தி.க வேறுபாடுகள்

ம.க.இ.க
1. வரலாற்று ரீதியான தமிழின வீரத்தையும், மற்ற கம்யூனிச புரட்சியின் மகத்துவத்தை பேசுகிறது.
2.முத்லாளித்துவத்தை முழுமையாக எதிர்க்கின்றனர்.
3. நவீனத்துவத்தை மறுத்து எப்போதும் உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே பேசும் வளர்ச்சிக்கு விரோதமாக இருக்கிறது.

பெ.தி.க
1. எப்போதும் பெரியாரை மட்டுமே முன்னிறித்துகிறது, வரலாற்றை புராணப்பண்டங்களாக கருதி முன்னிருத்துவதில்லை.
2. அமெரிக்க விஞ்ஞானத்தையும் அறிவியல், முதலாளித்துவ முன்னேற்றத்தையும் வலியுறுத்தினார்.
3. வெறும் பெரியார் மட்டுமே போதுமா? திராவிடம், திராவிடர் யார்? அது எங்கே இருக்கிறது?
அன்னை

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்,
பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்,
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்,
மேவினியில் நான் வாழ செய்தாள்.
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே,
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே,
நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்,
சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்,
ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள்,
மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே,
மேண்மையாய் நாம் வாழ செய்திடுவாள்,

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை.

Monday, February 4, 2008

புரிதல், ஒவ்வாமை, சினம்

உலகெங்கும் பல்வேறு இயற்கை பேரழிகள் நடந்து மனித இனத்தை வாட்டியெடுத்து இருக்கிறது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி கண்டுபிடித்த பல்வேறு அனு ஆயுதங்கள் அப்பாவி மனிதர்களை கொன்று குவித்து இருக்கிறது. இதற்கு காரணம் மனித இனம் பொதுவான புரிதல் இல்லாமலும், தனிபட்ட புரிதல்கள் இல்லாமலும், அனுசருனை இல்லாமலும் வாழ்வதலேயே. புரிதல் இல்லாவிட்டால் விலகிவிடலாமே ஒழிய, ஒவ்வாமையை வளர்த்து, சினத்தை வளர்த்து மனித இனத்தை அழிப்பது என்ன நியாயம்? உலகில் நடக்கும் அனைத்து அழிவுகளுக்கும் காரணமே தனிமனித மற்றும் இனங்களின் சினமுமே காரணம். இந்த சினத்தை மனிதன் சிந்தனையாக மாற்றினால் மனித குலம் மாண்புடன் வாழலாம்.
பெரியார் சொன்ன நொண்டி சாக்கு

தமிழர்கள் என்று சொன்னால் ஆரியர்கள் அதாவது பார்ப்பணர்களும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள் என்று சொன்னாராம். முதலில் திராவிடர் என்ற சொல்லை உயர்த்தி மேடைக்கு மேடை பேசியது பெரியார் தான். முதலிலேயே தமிழர்-ஆரியர் தமிழர்-பார்ப்பனர் என்று பிரித்து பேச தவறிவிட்டார். ஆரம்பத்தில் இவர் ஆந்திரம், கேரளம், கருநாடகம் இணைந்த மெட்ராஸ் பிரிசிடென்சி என்றிருந்த காரணத்தால் இவர் அனைவரையும் குறிக்கும் ஒரு சொல்லாக திராவிடர் என்ற சொல்லை பார்ப்பணர்களின் எதிர் சொல்லாய் பயன்படுத்தி பிரபலமாக்கிவிட்டார். எனவே பின்னாளில் மெட்ராஸ் பிரசிடென்சி மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இனி திராவிடம் பொய், தமிழ்நாட்டை தவிர்த்து எவரும் பார்ப்பனீயத்திற்கு எதிராக போராட தயாரில்லை என்றதும், சுலபமாக தமிழர்களையே திராவிடர்கள் என்ற முத்திரை குத்தி தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து திராவிடர்களாக்க முயற்சிக்கிறார்கள். இது துரோகமில்லையா? நாம் ஒரு அரசியல் பிழை செய்துவிட்டோமானால் அதையே ஒரு சமூக மக்கள் மீது தினித்து ஒரு வரலாற்று பிழையை செய்வதென்ன நியாயம்? மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதும் திராவிடர் என்ற முழக்கத்தை விடுத்து தமிழர்கள் என்ற முழக்கத்தை வைத்திருக்கவேண்டும். அதுவே நியாயமாக இருந்திருக்கும். அப்படி செய்யாமல் திராவிடர் முத்திரையை தமிழர்கள் தினிக்க அது தற்போது எடுபடாத விசயமாகிவிட்டது.
பேரண்டமும், கோல்களும், மனித இனமும்

இந்த பேரண்டம் என்பது 9 கோல்களை கொண்டதாகவும் பல்லாயிரக்கனக்கான நட்சத்திரங்கள் எனும் நெருப்பு பந்துகளையும் சூரியனையும், நிலாவையும் கொண்டதாக இருக்கிறது. பல்வேறு கோல்களில் பல நிலவும், பல சூரியனும் உடையதாக இருந்தாலும் பூமியை தவிர மற்ற கோலகளில் உயிரினங்கள் வாழ்வதாக உறுதிபடுத்தப்படவில்லை. இந்த பூமி பந்து பல்வேறு காலநிலைகளில் பல்வேறு ரசாயன மாற்றங்களை கண்டு பல லட்சக்கணக்கான உயிரினங்களை கொண்டதாக இருந்தாலும் மனிதனை போல பகுத்தறிவு கொண்ட உயிரி இந்த பேரண்டத்தில் இதுவரை இருப்பதாக கண்டறியபடவில்லை. மனிதனை காட்டிலும் பன்மடங்கு பலமுள்ளதாக இருக்கும் மிருகங்களுக்கு மனிதனை போல பகுத்தறியும் திறன் இல்லை. ஓரளவு ஒவ்வொரு மிருகங்கள் மற்றும் எரும்பு போன்ற ஒரு சில செல்களே கொண்ட உயிரிகள் கூட ஒற்றுமையுடன் வாழ்வதும், கூட்டுடமையாகவும், கட்டுபாடாக வாழ்வதும் பல அறிஞர்களுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. அப்படியிருக்க மனிதன் மனிதனையே ஏமாற்றி வாழ்ந்து வருவது மிகவும் கீழ்த்தரமான செயல். பெரியார் மனிதயினத்தின் மேன்மைக்காக வாழ்ந்தவர் வியத்தகு விசயமாகவும் போற்றபடவேண்டிய பின்பற்ற வேண்டிய விசயமாக இருந்தாலும் மனிதனின் பகுத்தறிவு வாழ்வில் கண்ணியமும், கட்டுபாடும் இருக்கவேண்டும் என்பது நியாயம் தானே? இவ்வளவு மேம்பட்ட மனிதயினம் நேர்மையின்றி லஞ்சம் வாங்குவதும், மனசாட்சியின்றி கொலை புரிவதும், உண்மைக்கு புறம்பாக பொயுறைப்பதும், கொடுஞ்சினம், தீங்கு செய்தலும், கட்டுபாடற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் மனிதனின் பகுத்தறிவிற்கு அழகா?
WITHDRAWAL TECHNIQUES

என்னைப்போல இ-குமுதம் வாசகர்களுக்கு பாமரன் புதிய மனிதர் தான், ஆனால் பெரியார் சொன்ன கருத்துக்களையும் காலத்திற்கு ஏற்றவாரு நாம் மாற்றி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுருத்தும் ஒரு தமிழ் பற்றாளராக, தமிழினம், தமிழ்தேசிய சிந்தனையாளர், ஆபாச சீரழிவுகளை எதிர்க்கும் சமூக ஆர்வலர், மனித நேயவாதி என்ற அடிப்படையில் பாமரனை பிடிக்கும். அவரது நையாண்டியான பேச்சு, சில நேரங்களில் சற்று தேவையற்ற ஆபாசமாக பதிப்பகத்தாரால்(அப்படித்தான் பழியப்போடனும்) கூட பதிக்கப்பட்டுவிடுகிறது. கவுன் போட்டுக்கொண்டு காலேஜிக்கு போவேன், பர்முடாஸ் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன் என்று சொன்னது லீனா மணிமேகலையை என்பது லீனா எதிர்ப்பு தெரிவித்த பின்னரே அறிவோம். லேனா தமிழ்வாணனன், மணிமேகலை பிரசுரம், லீனா மணிமேகலை இவர்களுக்குள் ஏதாவது உறவா? தெரியவில்லை. லேனா, லீனா கொஞ்சம் இடிக்கிறது. மணிமேகலை இணக்கிறது. புரியவில்லை. தற்போது பாமரன் எனக்கு "சேகுவேரா" வை பற்றி சொன்னதே லீனா மணிமேகலை தான், பெரியார் என எழுத கத்துக்கொடுத்த சிறுமி. என் மணைவிக்கு பெண் பிறந்திருந்தால் அவர் பெயரை வைத்திருப்பேன் என்று லீனாவின் அங்கிள் லாக பாமரன் வெள்ளைக்கொடி காட்டி ஏகத்துக்கு பாச மழை பொழிந்துவிட்டார். அதுமட்டுமா பெயரை சொல்லாவிட்டால் கோபித்துக்கொள்வார் என்று வேறு இனி சம்பவத்தோடு தொடர்புடையவரின் பெயரை எழுதபோவது போல் எழுதியிருக்கிறார். கோழை என்று தன் அங்கிளுக்கு பட்டம் கட்டிய லீனாவும் நானும் ஒரு சோசியலிச
சொந்தக்காரங்க தான் சும்மா குமுதம் பத்திரிக்கை மூலமா விளையாடிகிட்டு இருக்கோம் என்பது போல இருக்கிறது பாமரன் பக்கம். சிறுமியா இருந்தப்போ அடிக்கடி லீனா விடம் கற்றுக்கொண்டது போல் இப்போதும் அவரிடம் அவ்வப்போது பாமரன் பேசியிருக்கவேண்டும். அதைவிடுத்து இப்படி குமுதம் மூலமாக தாக்கினால்? சரி எப்படியோ மீண்டும் பாமரனுக்கு ஒரு நல்ல எழுத்தாளன் துணிவுடன் சம்பந்தபட்ட நபரின் பெயரை குறிப்பிட்டு எழுதவேண்டும் என்று உணர்த்தியிருக்கிறார் லீனா. இயக்குனர் ஆல்ப்ஸ் தொட்டபெட்டா என்றெல்லாம் ஒரு சிகரத்தையே வெறும் சுண்ணாம்பு கல் என்றவரை ஒரு கோழை என்று சொல்லிவிடமுடியுமா லீனா? உங்கள் பெயரை குறிப்பிடுவதற்கு தயங்கியது அவருக்கு உங்கள் மீது இருக்கும் பாசமும் அன்பும் காரணமாக இருந்திருக்கலாம்.எது எப்படியோ தன் எழுத்துக்கு எழுந்த எதிர்ப்பை சாதுர்யமாக சமாளித்து தன் வருமாணத்திற்கு பங்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். இருந்தாலும் ஒரு முழுபக்க படம் போட்டு பாமரனை பெருமைபடுத்தினார்கள் அல்லவா? பாமரன் அவர்களே இந்த காலத்துல வீராதிவீரராக இருந்துவிட்டால் மட்டும் இந்த சமூக வாழ்க்கைக்கு போதாது கொஞ்சம் சாதுர்யமாக வாழவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை தங்களின் எழுத்தின் மூலம் புரிந்துகொண்டேன். இதுக்கு பேர் தான் Withdrawal அதாவது நாசுக்காக வாபஸ் வாங்குவது என்று சிலர் கூறுகிறார்கள்.