Tuesday, January 29, 2008

திராவிடம், தமிழ்தேசியம், மார்க்சியம்

தமிழ்தேசியவாதிகளுடன் கைகோர்த்த திராவிட இயக்கத்தினர், தற்போது மார்க்சிய மக்கள் கலை இயக்கிய கழகத்துடன் கைகோர்த்துள்ளனர். அனாதையாக இருந்த இந்து பாசிசவாதிகளுடன் தமிழ்தேசியவாதிகள் கைகோர்த்துள்ளனர். மறைந்திருந்த மாற்றுமுகங்கள் இப்போது வெளிப்பட துவங்கியுள்ளது. உண்மையிலேயே தேசியத்தில் இருக்கும் முதலாளித்துவ முகம் பாசிச பா.ஜ.க வையும், திராவிட இயக்கத்தில் இருக்கும் மார்க்சிய முகம் ம.க.இ.க வாக இயங்கும் மார்க்சியத்துடனும் கைகோர்த்து உள்ளது. இந்த ஒளிந்துகிடக்கும் முகங்களை பலரும் அடையாளம் கானவில்லை, ஆனால் சமுதாயத்தின் அரசியல் பொருளாதார பரினாமம் இந்த முகங்களை தெளிவுபடுத்தியுள்ளது.

திராவிடம் பேசிய பெரியார், மார்க்சியத்தை ஆதரித்த பெரியார் ஏன் தற்போதைக்கு தான் கம்யூனிசத்திற்காக போராட போவதில்லை என்று கூறினார், காரணம் பெரியாருக்கு முதலாளித்துவ அறிவியல் வளர்ச்சி அறியாமையை விரட்ட தேவை என்றும், தனிமனித வளர்ச்சிக்கும் தேவை என்பதால்தான். அப்போதே ஜீவா, சிங்காரவேலர் போன்றவர்களுக்கு முரன்பாடு ஏற்பட்டது, ஆனால் அதன் பின்னர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது மார்க்சியவாதிகள் பெரியாரை தழுவ காரணம் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்பதால் தான். ஆனால் இன்றைய திராவிட இயக்கங்கள் தமிழ்தேசியத்தை பின்னுக்கு தள்ளி மார்க்சியத்தை தழுவிக்கொண்டுள்ளது. கம்யூனிசத்தை தழுவினால் அறிவியல் வளர்ச்சியை கானமுடியாது என்பதை சார். ஏ.டி. பண்ணீர்செல்வம் அந்த காலத்திலேயே பெரியாரை எச்சரித்திருக்கிறார். ஆனால் இன்று திராவிட இயக்கங்கள் அதை மறந்துபோனது.

பார்ப்பனியத்தை எதிர்க்கும் மார்க்சிய கட்சி பார்ப்பனர்கள் நிறைந்த காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு தன் மார்க்சிய முகத்தை காப்பாற்றிகொள்ள அவ்வப்போது காங்கிரசை மிரட்டிக்கொண்டிருக்கிறது. காங்கிரசோ மோடிக்கு காமராசர் அரங்கத்தை வாடகைக்கு விட்டு காங்கிரசே பார்ப்பனர்களின் வீடுதான் என்று காட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மார்க்சியவாதிகள் பெரியாரை தாங்குவதற்கு காரனம் பெரியார் தான் இங்கு தமிழகத்தின் தந்தையாக மதிக்கப்படுபவர், ஆனால் அவர் போராடியது மார்க்சியத்திற்காகவோ அல்லது தமிழ்தேசியத்திற்காகவோ அல்ல, மனிதநேயத்திற்காக.

தேசியத்தில் மனிதநேயம் இருக்காது என்றும் தேசியம் அடிமைகளை வளர்க்கும் என்று மார்க்சியம் ஒருபோதும் சொல்லவில்லை. மார்க்சியவாதிகள் மார்க்சியத்தையே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை

No comments: