Tuesday, January 29, 2008

திராவிடமும் திராவிடரும்

திராவிடர் என்றால் பெரியாரை தான் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவார், பெரியார் என்னவோ முதலில் மொழி, இன, தேசம் என்ற பேதமில்லாத மனித நேயத்தை தான் விரும்பினார் ஆனால், சமூகச்சூழலும் மக்கள் எண்ணமும் அவரது எண்ணத்தை மாற்றிவிட்டது, அரசின் நெருக்குதலாலும் அவர் மாற்றத்தை தழுவினார் என்று கூட சொல்லலாம். முதலில் திராவிட தேசம் என்று பேசி வந்தார் அதன் காரனமாகவே மொழி, இன, நாடு என்ற பற்று இருக்ககூடாது என்றவர் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேச பட்த்தை கொளுத்தினார். வடநாடு பார்ப்பனர் தேசம் என்ற பொருளில் தான் பெரியார் திராவிடநாடு பற்றியே பேசினார் உன்மையிலேயே திராவிடர்கள் பார்ப்பனர்களால் நசுக்கப்பட்டதை காட்டிலும் வடநாட்டு மக்களே அதிகமாக கலாச்சார ரீதியாக மாற்றப்பட்டிருந்தனர். ஆனால் பெரியார் அவர்களை காக்கவோ மாற்றவோ எல்லாம் எந்த ஒரு போராட்டமும் நடத்தவில்லை. அவர் தன் போராட்ட சக்தி அல்லது ஒரு யுத்தி என திராவிட நாட்டைப்பற்றி பேசினார். ஆனால் ஒரு காலகட்டத்தில் தமிழகம் தவிர வேறெங்கும் திராவிடன் என்ற உணர்வு இல்லை என்பதை உணர்ந்த பெரியார் தமிழ்நாடு தமிழர் என்று பேசினாலும் திராவிடர் கழகம் என்ற பெயரை தமிழர் கழகம் என்று மாற்றவில்லை. ஆனால் தமிழரை திராவிடர் என்று அழைப்பது வரலாற்று பிழையாக மாறிவிடும், மாற்ற இன்றும்கூட முயற்சி நடக்கிறது. இன்று திராவிடர் கழகங்களுக்கு மக்கள் ஆதரவு என்பதே இல்லை என்று சொல்லலாம், எனவே தற்போது தமிழகத்திற்கு வாழ்வு தேடி வந்த வேற்று மாநிலத்தவர்களின் நல்வாழ்விற்காக பாடுபட ஆரம்பித்துள்ளார்கள். தமிழர்களுக்காக அல்ல. அடிப்படையாக இவர்களுக்கு தமிழ் பற்று இல்லை, வர்க்க ரீதியாக சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களின் உரிமை மீதான பற்று மட்டுமே உள்ளது என்று சொல்லலாம். இதை மார்க்சியம் என்று தான் சொல்லமுடியும். பெரியார் ஆரம்பத்தில் எடுத்த திராவிட நாடு நடைமுறை சாத்தியமல்ல பல்வேறு மொழி பேசிபவரை ஒன்றாக இனைக்கமுடியாது என்றுணர்ந்த பெரியார் தமிழ்தேசியம் பேசினார். தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்த பெரியார் தெலுங்கு தேசம் கூறி போராட போகாமைக்கு காரணம் அங்கு இவரது கொள்கைகளை ஆரம்பத்திலிருந்தே எடுத்து செல்லவில்லை, அதனால் ஆந்திராவிலோ மற்ற மாநிலத்திலோ இவருக்கு ஆதரவாளர்கள் இல்லை. அதனால் தன் கொள்கையை ஏற்றுக்கொண்ட தமிழகத்தில் தன் திராவிடர் கழத்தை வைத்து "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை வைக்க ஆரம்பித்தார். இது அடிப்படையில் தவறாகும், தான் நம்பிக்கையிழந்த திராவிடத்தின் பெயரில இயக்கம் வைத்துக்கொண்டு தமிழ்தேசியம் பேசியது, இவர் பெரிய தேச கனவில் இருந்து பல்வேறு நெருக்குதலால் குறுகிய தமிழ்தேசியத்திற்கு வந்துவிட்டதை இவர் ஒரு தாழ்வு நிலையாக கருதியிருக்கலாம் அல்லது தன் நம்பிக்கை நசுக்கப்பட்டதை "தமிழர் கழகம்" என்று வைத்தால் எதிரிகள் இந்த பெயர் மாற்றத்தை கையிலெடுத்து கடுமையாக விமர்சிக்ககூடும் என்று அஞ்சியிருக்கலாம். அல்லது திராவிடர் கழகமாக நடத்தினால் பார்ப்பனர்களுக்கு ஒரு எதிர் வார்த்தையாகவும் அச்சமூட்டும் வார்த்தையாகவும் இருக்கும் என்று கருதியிருக்கலாம். ஆனால் தமிழருக்கான அடையாளத்தை திராவிடர் என்ற சொல் உயர்த்தி பிடிக்கவில்லை, இந்த திராவிடர் என்ற சொல்லை ஒரு குடையாக பிடித்துக்கொண்டு சிலர் இங்கு குளிர்காய அமர்ந்துள்ளனர், அவர்களுக்கு இருக்கும் குடையாகவும் தாங்கியாகவும் இருப்பது திராவிட இயக்கங்கள் தான். தேசியம் என்பது பல்வேறு திட்டமிடலுக்கு அவசியமாகிறது. சிலர் தேசியத்தை முதலாளித்துவம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் தேசியம் முதலாளித்துவம் என்றால் திட்டமிடல் முதலாளித்துவம், திட்டமிடலுக்கு அடிப்படையாக இருக்கும் கணக்கு முதலாளித்துவம், பொருளியல் முதலாளித்துவம், அறிவியல் முதலாளித்துவம், மக்களை காக்க அமைக்கப்பட்ட இராணுவமும், அரசாங்கமும் முதலாளித்துவம், இது எல்லாம் ஒரு கட்டுபாடாக அமைகிறது, இந்த கட்டுப்பாடும் முதலாளித்துவம் ஆகிறது, இப்படி மொத்தத்தையும் எதிர்த்தால் நாம் கட்டுப்பாடற்ற வாழ்விற்கு போகும் போது எந்த அடிப்படையில் கூட்டுடமை அமையும்? மீண்டும் மனிதனை ஏய்க்கும் நிலையே நிற்கும். நாம் பேசும் கட்டுப்பாடு பாலியல் ஒழுக்கம் என்ற பொருளில் அல்ல, சமுதாய கட்டுக்கோப்பும் ஆட்சி முறையும். வெறும் அடிப்படை தேவை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய வாழ்வு ஆரம்ப காலகட்டத்தின் உண்மை. ஆனால் மனிதினின் சிந்தனையும் வளர்ச்சியும், பயன்பாடு போக மீதமும் இன்று நம்மை நவீனத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இதை தொடர்ந்து தான் தகவல் தொடர்பு வசதிகளும் உலக அமைப்பின் புரிதலும், மனித நாகரீகமும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது நியாயம் தான், அதற்காக வளர்ச்சியடைந்த மக்கள் பின்னோக்கி செல்லவேண்டும் என்பது சரியாகாது. முன்னேறியவர்கள் மற்றவர்கள் வளரவும் சமத்துவம் ஓங்கவும் உழைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும். பெரியார் கம்யூனிசம் பேசினாலும் அமெரிக்க விஞ்ஞானிகளை பற்றி கண்ணாடி வைத்து படித்தார் அல்லவா அது எதற்கு? எனவே தேசியம் என்பது ஒரு கூட்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமாகிறது. உலகமே ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்பதே மர்க்சியவாதிகளின் விருப்பம், முதலாள்களின் விருப்பம், முதலாளித்துவத்தின் கை எப்போதும் ஓங்கியே இருப்பதற்கு காரணம் விஞ்ஞானத்தின் விளைபொருள் அவர்களின் உற்பத்தியாகிவிட்டது, அது மார்க்சியவாதிகளின் கைக்கு காலம் கடந்தே வருகிறது. மேலும் மார்க்சியவாதிகள் மனித நேயத்தை விரும்பும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சிக்காக உழைக்கவில்லை. அதனால் மார்க்சியத்தின் வளர்ச்சி என்பது ஆமை வேகமாகத்தான் இருக்கும், ஜோதிபாசுவே அதற்கான காலம் வெகு தொலைவில் இருக்கிறது என்றும் மார்க்சியத்தின் வளர்ச்சிக்கு உதவாத பேச்சை பேசுகிறார். தேசியத்தை மறுப்பது முதலாளித்துவத்தை எதிர்க்க ஒரு அதே பாதையில் எதிர்க்க சரியான உத்தியாக இருக்கலாம். ஆனால் பல்வேறு தேசிய இனங்களை இனைப்பது ஒரு மொழியாக இருந்தால் தான் முடியும், அதோடு நிறவெறி என்பது பிறவிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிறவெறியை ஒழிக்கும் வரை மார்க்சியம் என்பது சாத்தியமல்ல. மார்க்சியத்திற்கு பல்வேறு தடைகளும் எதிர்நிலையும் இருக்கிறது.

No comments: