Monday, February 4, 2008

WITHDRAWAL TECHNIQUES

என்னைப்போல இ-குமுதம் வாசகர்களுக்கு பாமரன் புதிய மனிதர் தான், ஆனால் பெரியார் சொன்ன கருத்துக்களையும் காலத்திற்கு ஏற்றவாரு நாம் மாற்றி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுருத்தும் ஒரு தமிழ் பற்றாளராக, தமிழினம், தமிழ்தேசிய சிந்தனையாளர், ஆபாச சீரழிவுகளை எதிர்க்கும் சமூக ஆர்வலர், மனித நேயவாதி என்ற அடிப்படையில் பாமரனை பிடிக்கும். அவரது நையாண்டியான பேச்சு, சில நேரங்களில் சற்று தேவையற்ற ஆபாசமாக பதிப்பகத்தாரால்(அப்படித்தான் பழியப்போடனும்) கூட பதிக்கப்பட்டுவிடுகிறது. கவுன் போட்டுக்கொண்டு காலேஜிக்கு போவேன், பர்முடாஸ் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன் என்று சொன்னது லீனா மணிமேகலையை என்பது லீனா எதிர்ப்பு தெரிவித்த பின்னரே அறிவோம். லேனா தமிழ்வாணனன், மணிமேகலை பிரசுரம், லீனா மணிமேகலை இவர்களுக்குள் ஏதாவது உறவா? தெரியவில்லை. லேனா, லீனா கொஞ்சம் இடிக்கிறது. மணிமேகலை இணக்கிறது. புரியவில்லை. தற்போது பாமரன் எனக்கு "சேகுவேரா" வை பற்றி சொன்னதே லீனா மணிமேகலை தான், பெரியார் என எழுத கத்துக்கொடுத்த சிறுமி. என் மணைவிக்கு பெண் பிறந்திருந்தால் அவர் பெயரை வைத்திருப்பேன் என்று லீனாவின் அங்கிள் லாக பாமரன் வெள்ளைக்கொடி காட்டி ஏகத்துக்கு பாச மழை பொழிந்துவிட்டார். அதுமட்டுமா பெயரை சொல்லாவிட்டால் கோபித்துக்கொள்வார் என்று வேறு இனி சம்பவத்தோடு தொடர்புடையவரின் பெயரை எழுதபோவது போல் எழுதியிருக்கிறார். கோழை என்று தன் அங்கிளுக்கு பட்டம் கட்டிய லீனாவும் நானும் ஒரு சோசியலிச
சொந்தக்காரங்க தான் சும்மா குமுதம் பத்திரிக்கை மூலமா விளையாடிகிட்டு இருக்கோம் என்பது போல இருக்கிறது பாமரன் பக்கம். சிறுமியா இருந்தப்போ அடிக்கடி லீனா விடம் கற்றுக்கொண்டது போல் இப்போதும் அவரிடம் அவ்வப்போது பாமரன் பேசியிருக்கவேண்டும். அதைவிடுத்து இப்படி குமுதம் மூலமாக தாக்கினால்? சரி எப்படியோ மீண்டும் பாமரனுக்கு ஒரு நல்ல எழுத்தாளன் துணிவுடன் சம்பந்தபட்ட நபரின் பெயரை குறிப்பிட்டு எழுதவேண்டும் என்று உணர்த்தியிருக்கிறார் லீனா. இயக்குனர் ஆல்ப்ஸ் தொட்டபெட்டா என்றெல்லாம் ஒரு சிகரத்தையே வெறும் சுண்ணாம்பு கல் என்றவரை ஒரு கோழை என்று சொல்லிவிடமுடியுமா லீனா? உங்கள் பெயரை குறிப்பிடுவதற்கு தயங்கியது அவருக்கு உங்கள் மீது இருக்கும் பாசமும் அன்பும் காரணமாக இருந்திருக்கலாம்.எது எப்படியோ தன் எழுத்துக்கு எழுந்த எதிர்ப்பை சாதுர்யமாக சமாளித்து தன் வருமாணத்திற்கு பங்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். இருந்தாலும் ஒரு முழுபக்க படம் போட்டு பாமரனை பெருமைபடுத்தினார்கள் அல்லவா? பாமரன் அவர்களே இந்த காலத்துல வீராதிவீரராக இருந்துவிட்டால் மட்டும் இந்த சமூக வாழ்க்கைக்கு போதாது கொஞ்சம் சாதுர்யமாக வாழவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை தங்களின் எழுத்தின் மூலம் புரிந்துகொண்டேன். இதுக்கு பேர் தான் Withdrawal அதாவது நாசுக்காக வாபஸ் வாங்குவது என்று சிலர் கூறுகிறார்கள்.

No comments: