Monday, February 4, 2008

பெரியார் சொன்ன நொண்டி சாக்கு

தமிழர்கள் என்று சொன்னால் ஆரியர்கள் அதாவது பார்ப்பணர்களும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள் என்று சொன்னாராம். முதலில் திராவிடர் என்ற சொல்லை உயர்த்தி மேடைக்கு மேடை பேசியது பெரியார் தான். முதலிலேயே தமிழர்-ஆரியர் தமிழர்-பார்ப்பனர் என்று பிரித்து பேச தவறிவிட்டார். ஆரம்பத்தில் இவர் ஆந்திரம், கேரளம், கருநாடகம் இணைந்த மெட்ராஸ் பிரிசிடென்சி என்றிருந்த காரணத்தால் இவர் அனைவரையும் குறிக்கும் ஒரு சொல்லாக திராவிடர் என்ற சொல்லை பார்ப்பணர்களின் எதிர் சொல்லாய் பயன்படுத்தி பிரபலமாக்கிவிட்டார். எனவே பின்னாளில் மெட்ராஸ் பிரசிடென்சி மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இனி திராவிடம் பொய், தமிழ்நாட்டை தவிர்த்து எவரும் பார்ப்பனீயத்திற்கு எதிராக போராட தயாரில்லை என்றதும், சுலபமாக தமிழர்களையே திராவிடர்கள் என்ற முத்திரை குத்தி தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து திராவிடர்களாக்க முயற்சிக்கிறார்கள். இது துரோகமில்லையா? நாம் ஒரு அரசியல் பிழை செய்துவிட்டோமானால் அதையே ஒரு சமூக மக்கள் மீது தினித்து ஒரு வரலாற்று பிழையை செய்வதென்ன நியாயம்? மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதும் திராவிடர் என்ற முழக்கத்தை விடுத்து தமிழர்கள் என்ற முழக்கத்தை வைத்திருக்கவேண்டும். அதுவே நியாயமாக இருந்திருக்கும். அப்படி செய்யாமல் திராவிடர் முத்திரையை தமிழர்கள் தினிக்க அது தற்போது எடுபடாத விசயமாகிவிட்டது.

No comments: