Monday, December 10, 2007

தமிழ்நாட்டின் 2006-2007 மதுபான விற்பனை 4,837 கோடி!

தமிழ்நாட்டின் 2005-2006 மதுபான விற்பனை 3,921 கோடி.2006-2007 க்கான விற்பனை 4,837 கோடி. (நன்றி நக்கீரன்). ஆண்டுக்கு சுமார் 1,000 கோடிக்கு மதுபான விற்பனை அதிகமாகிறது என்றால் தமிழ்நாடு என்னவாகும்? பெரியார் சொன்னாராம் மது விலக்கை அமல்படுத்தினால் உழைப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் என்று (குடியரசை மேற்கோள் காட்டி நாதாரி). இப்போது மது விற்பனை அதிகரித்திருப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் உழைப்பாளிகள் அதிகரித்துவிட்டார்கள் போல் தெரிகிறதே! தமிழ்நாட்டுக் குடிமக்களே உன்மையா? உழைப்பாளர்கள் அதிகமானார்களோ இல்லையோ திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்து குடிமகன்கள் சாவுதான் அதிகமானது. மேலும் குடித்துவிட்டு வாகணம் ஓட்டி விபத்துக்குள்ளாகி இறப்பு எண்ணிக்கை அதிகமாகி உள்ளதோடு வழக்குகளும் அதிகமாகியுள்ளது. குடியினால் பலகுடும்பங்கள் உழைத்தவர்களை இழந்து வாடுகிறது. பெரியார் கள்ளுக்கடையை எதிர்த்து போராடினார் என்றுதான் எல்லோரும் பேசுகிறார்கள், ஆனால் பெரியாரோ பலமுறை திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான குடியரசு ஏட்டிலேயே மதுவிலக்கை எதிர்த்து எழுதியிருக்கிறார் அதைப்பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுவதாக சிலர் கூறுகிறார்கள்.

No comments: