Monday, December 10, 2007

இந்தியதேசிய அரசியல் துரோகம்!

காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகள் அல்லது தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் கடந்த இருபது ஆண்டுகளாகவே தனித்து ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. பல மாநிலங்களில் மாநிலக்கட்சிகளும், பெரும்பாலும் மாநில சுயாட்சி உரிமை கோரிய கட்சிகளுமே ஆட்சியை பிடித்துள்ளது. இந்த போக்கு எதைக் காட்டுகிறது? மக்கள் தேசிய கட்சிகளை நம்பவில்லை இந்திய தேசிய கருத்தை ஏற்வில்லை, தங்கள் மாநில மக்களின் நலன் காக்கும் கட்சிகளையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதைதானே காட்டுகிறது? அதேடு இன்று ஆளும் காங்கிரஸ் பா.ஜ.க வால் தீவிரவாத பட்டம் கட்டப்பட்ட பல பிரிவினைவாத இயக்கங்களோடு இனக்கமான போக்கை கடைப்பிடிப்பதற்கு காரணம் மிரட்டாமல் காலைப்பிடித்து காரியம் சாதிப்பதுதான். மேலும் சட்டத்திற்கு பயந்த கொள்கை நீர்த்துபோன சில இயக்கங்களை அரவணைத்துக்கொள்வதும் இவர்களின் சாதுர்யம். வெள்ளையனை எதிர்க்க மக்கள் ஒன்று திரட்டப்பட்டு பின் ஒரே நாடாக்கப்பட்டு ஒரு போலி சமூகம் உருவாக்கப்பட்டது. இது போன்ற கருத்தியல் அடிப்படையற்ற தேசியவாதம் நீண்ட காலம் நிலைக்காது என்பதே இந்திய தேசியவாதிகளுக்கு புரியவில்லை. குறிப்பாக பா.ஜ.க பிரிவினைவாதததை தடுக்கவே பொடா போன்ற கடுமையான சட்டங்களை கொண்டுவந்தது. பிரிவினை கோரிய சில மாநிலக்கட்சிகள் மக்களின் தீர்ப்பிற்கு எதிராக மதவாத, தேசியவாத பா.ஜ.க அரசை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து பொடா போண்ற மக்கள் விரோத சட்டத்தையும் ஆதரித்து மக்கள் செல்வாக்கை இழந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதில் நடுநிலையாக அதாவது Secular என்ற அனைவரையும் அரவனைக்கும் கட்சி, என்று பசுந்தோல் போர்த்திய புலியாக பதுங்குகிறது. சர்வதிகார போக்கை கடைபிடித்த பா.ஜ.க தன்னழிப்பால் காங்கிரஸை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது. போலி கம்யூனிஸ்டுகள் குரங்காட்டிகளாயினர். தன்னாட்சி அதிகாரம் கோரிய தன்மானச் சிங்கங்கள் கொள்கை நீர்த்துப் பூனைகளாய் போனார்கள். அதாவது சுயமரியாதையையும் மக்கள் நலனும் பேசி ஆட்சியை பிடித்த அரசியல் கட்சிகள் மகன், மகள், பேரன், மாமன், மச்சான், மனைவி, கூத்தி இவர்களின் பதவி, பணம், பட்டம் இவற்றிற்காக கொள்கையை அடகு வைத்துவிட்டு தேசிய ஆட்சிக்கு முட்டுகொடுக்க ஆரம்பித்தனர்.

90 களின் ஆரம்பத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல மாநிலக்கட்சிகள் தாராளமய கொள்ளைகையை எதிர்த்தனர், எதிர்த்து கடுமையான விமர்சனைங்களை வைத்துவிட்டு பின்னர் பண வரத்தைக்கண்டு அதே தேசிய கட்சிகளுக்கு மக்களை அடகு வைக்க ஆரம்பித்து இன்று ஆசிய அளவில் பணக்காரர்கள் ஆகியுள்ளனர். சிலர் தானும் ஒரு கட்சி என்பதை காப்பாற்றிக்கொள்ளவே மாறி மாறி கூட்டனி அமைத்துள்ளனர். ஆனால் யருமே மக்களின் தீர்ப்பை செயல்படுத்தவில்லை. எனவே, தேசிய கட்சிகள் எதிரிகள் என்றால் இவர்களுக்கு துனைப்போகும் மாநில கட்சிகள் மக்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் அடகு வைத்த கோடாரி காம்புகள். இதில் எந்த அரசியல்வாதியோ, அரசியல் கட்சியோ விதிவிலக்கல்ல. இதே காரணத்தினால்தான் நம்மால் எந்த அரசியல் தலைவரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைய நிலையில் நாடாளுமண்றத்தில் உள்ள மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை புறக்கனித்தாலே போதும் தேசியம் என்பது எவ்வள்வு பொய் என்பது விளங்கிவிடும். அதாவது மக்களின் தீர்ப்பை நியாயமாக வெளிப்படுத்தினால் இந்திய தேசியம் என்பது பொய்த்து போய்விடும். அதாவது எந்த தேசியக்கட்சியும் பெரும்பாண்மையை நிருபிக்கமுடியாது. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த நிலைதான். ஆனால் அரசியல் கட்சிகள் மக்களின் இந்த எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை. தொடர்ந்து மக்கள் விரோத போலி அரசுதான் ஆட்சியில் இருக்கிறது. முழுமையாக மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்க அரசாக இல்லாததாலேயே இந்திய அரசு மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. மக்களை வெரும் வாக்களிக்கும் பொருளாகவே அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவேதான் புரட்சியியக்கங்கள் தேர்தல் புறக்கணிப்பை பின்பற்றுகின்றனர். அது மட்டுமின்றி வாக்குரிமையுள்ள குடிமக்களில் கிட்டதட்ட 50% பேர் வாக்கள்ப்பதே இல்லை. இந்த பதிவாகாத வாக்குகளை முழுமையாக தற்போதைய தேசிய நடைமுறைக்கு எதிரான வாக்குகளாகத்தான் கருதமுடியும். இப்படி பல வகையில் பார்த்தால் இந்திய அரசும், மாநில அரசுகளும் மக்கள் விரோத அரசுகளே. இனி அரசியல் கட்சிகள் இப்படித்தான் என்று தெரிந்த பிறகு கொஞ்சமேனும் சூடு சொரணையுள்ள மக்களே தங்களுக்கான சுயாட்சியை நிறுவ புரட்சி செய்ய முன்வர வேண்டும். 60 ஆண்டுகளாய் தூங்கியது போதும் உடனே விழி தமிழா!!!

No comments: