Monday, December 10, 2007

தமிழ்நாடு தனிநாடு!

35,000 , 50,000 பேர் வாழக்கூடிய் சிறிய நகரமெல்லாம் நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 கோடிக்கு மேல் வாழும் தமிழ் சமூகத்திற்கு ஒரு நாடு இருக்ககூடாதா? உலகில் உள்ள 192 நாடுகளில் சுமார் 170 நாடுகள் தமிழகத்தைவிட குறைவான மக்கள்த்தொகை கொண்டவையே. 920 பேர் வாழும் வாடிகன் ஒரு நாடு, ஒருகாலத்தில் சூரியன் அஸ்தமிக்காத தேசம் எங்கள் தேசம் என்று மார்தட்டிய பிரித்தாணியவின் இன்றைய மக்கள் தொகையே 6 கோடிதான். பிரித்தாணியா உலக மக்கள்த்தொகையில் 21 வது இடத்தில் உள்ளது, உலகை கொள்ளையடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதலில் தமிழினம் 65 நாடுகளில் பரவி வாழ்கிறது என்று பெருமை பேசுவதை தவிர்த்துவிட்டு தமிழனுக்கான ஒரு தனிநாட்டை பெற முயற்சிக்கவேண்டும். நாம் யாரிடமும் கேட்டுப் பெற தேவையில்லை. நமக்கான சுயாட்சி உரிமையை நிலைநாட்டி ஐ.நா விலே நமக்கான இருக்கையை பெற வேண்டும். அதற்கு முதற்படியாக தமிழர்கள் அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும். நாம் ஏன் நாடோடியாக வாழவேண்டும்? நாம் யாருக்கும் அடிமையில்லை என அறிவித்து நமக்கான அடிப்படை தேவைகள் மற்றும் கட்டமைப்புகளிலே கவணம் செலுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு, அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து துறைகளிலும் தன்னிறைவு கான வேண்டும். அதற்கான திட்டமிடல், செயல்படுதல், போண்ற வேலைகளில் இளைஞர்கள் அனைவரும் பங்கெடுத்து தூங்கி வழியும் இச்சமூகத்தை தூக்கி நிறுத்த வேண்டும். தமிழ் மக்களின் உடலில் புதிய குருதி பாயவேண்டும். தமிழரெல்லாம் புத்துணர்ச்சி பெற வேண்டும்.

No comments: