Monday, December 10, 2007

குடும்ப அமைப்பை சிதைக்கும் பெரி-ஆரியம்!

பெரியார் வளர்த்த இயக்கங்களின் வளர்ச்சியை ஒரு கிராப்பில் வரைவோமானால் அதன் வளர்ச்சி என்பது பின்னோக்கி போய்கொண்டிருப்பதை உணரலாம். அதாவது ஒரு இயக்கம் அல்லது நிறுவணம் தனி மணிதன் இவற்றின் வளர்ச்சியை Horizontal and Vertical growth என்ற அளவுகோள்களால் மதிப்பிடலாம். அதாவது பெரியாரின் கருத்துக்களில் சமுதாய மாற்றங்கள் அல்லது வளர்ச்சிக்கேற்ப மாற்றம் என்ன என்பதை x-axis அதாவது horizontal scale லும், அதன் தாக்கத்தால் ஏற்பட்ட சமுதாய வளர்ச்சி அல்லது விளைவுகள் என்ன என்பதை y-axis அதாவது vertical scale லும் வரைந்து பார்ப்போமேயானால் பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் மாற்றமில்லாமல் அப்படியே இருக்க, சமுதாயம் மேற்கத்திய கலாச்சாரம், உலகமயமாக்கல், தகவல் தொழில்நுட்ப புரட்சி போண்ற புரட்சிகளால் பெரியாரின் புரட்சியை ஓரம் கட்டிவிட்டன என்று சொல்லலாம். ஒரு தனி மணிதன் எடுத்த முயற்சிகளெல்லாம் இன்று உன்மையான தொண்டர்கள் மற்றும் உற்சாகமின்மை காரணமாக பெரியாரின் கணவுகள் கணவுகளாகவே தொடர்கின்றன. மாற்றமே நிலையானது எனவே மாற்றங்களை தவிர்க்கமுடியாது என்ற பெரியாரின் எண்ணத்திற்கு மாறாக உலகமயமாக்கல் என்ற சுரண்டல் மாற்றத்தை எதிர்க்க வேண்டிய சூழலுக்கு பெரியார் அமைப்புகள் தள்ளப்பட்டுவிட்டன. இந்து வெறியர்களின் கூச்சல் வெறும் பிள்ளையார் ஊர்வலத்துடன் முடிந்துவிடுகிறதென்றால் அதற்கு பெரியார் அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெண்ணுரிமையில் என்ன முன்னேற்றம் பொருளாதார ரீதியாக சற்று முன்னேற்றம் கண்டிருப்பதை தவிர்த்து? திருமணங்கள் ஒழிய வேண்டும், குடும்பம் என்ற அமைப்பே கூடாது என்பது பெரியாரின் நோக்கம், இதற்கு மிக முக்கிய காரணம் திருமணங்கள் பெண்ணை அடிமைப்படுத்துகிறது, குடும்ப அமைப்பு சுயநலத்தை வளர்க்கிறது என்பதுதான். ஆனால் குடும்ப அமைப்புக்குள்ளேயே சம உரிமையோடு பெண்ணும் ஆணும் இணைந்து வாழமுடியாதா? குடும்பமாக இருப்பவர்கள் தன்னலமின்றி சமுதாயப்பனிகளுக்காக அற்பனிக்கமுடியாதா? தான் இல்லாவிட்டாலும் அரசும் மக்களும் எமது குடும்பத்தை பாதுகாப்பார்கள் என்ற சே குவேராவின் நம்பிக்கை எங்கிருந்து வந்தது. விடுதலைப்புலிகள் இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் அங்கு தன்னலமற்ற அர்ப்பனிப்புக்கு மக்கள் முன்வருகிறார்கள். எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்திட அரசு உறுதி செய்தால் தன்னலம் என்பதே இல்லாமல் போகும்.

ஆனால் அரசு அந்த நம்பிக்கையை வழங்கவில்லை. அதற்கு பெரியார் அமைப்புகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறி மாறி அரசுகளுக்கு ஆதரவாக தங்கள் சுயநலத்திற்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும் அறிக்கைகள் விட்டவண்ணம் இருக்கிறார்களே ஒழிய மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் ஏதுமில்லை. அதுமட்டுமல்ல பெரியார் அன்றைக்கே கூறிய சில கருத்துக்களுக்கு மக்கள் எந்தக்கேள்வியும் கேட்கவில்லை. அவர் கூறிய கருத்து இதுதான், வருங்காலத்தில் பொலி எருது போண்ற ஒரு ஆணின் உயிரனுக்களை கொண்டு பெண்கள் பிள்ளை பெறுவார்கள் என்று. பெண்கள் கருப்பையை நீக்கிவிடவேண்டும் என்று கூறியவர் இப்படி ஒரு கருத்தை எப்படி கூறுகிறார். மாறாக ஆண்கள் பிள்ளை பெற ஏதாவது வழி சொல்லியிருந்தால் பெண்களுக்கு பாரமாவது மிச்சம். சரி திருமணத்தை ஒழித்துவிட்டு, குடும்பத்தையும் இல்லாமல் செய்துவிட்டு, பிள்ளைகள் பெருவதையும் நிறுத்திவிட்டால் சில காலத்தில் தமிழ்நாட்டில் யார் இருப்பார்? சிலர் கூறுவதைப்போல இனம் மொழிக்கடந்த பெரியாரின் கருத்துக்கள் உலகிற்கே பொருந்துமானால் உலகிலேயே எவரும் இருக்கமாட்டார்கள். சரி இவர் சொல்வதைப்ப்போல் செயற்கை கரு என்றால் எல்லோரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள், ஒரே குடும்ப வழியில் திருமணம் நடக்கும் குடும்பத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பிறக்காது என்று சொல்கிறார்களே, எதிர்கால சமூகம் எப்படி இருக்கும்? தமிழ்நாடு இந்தியாவிலிருந்து விடுபட்டால்தான் தாம் நினைக்கும் மாற்றங்களை கொண்டுவர முடியும் என பெரியார் நம்பினார். அதனால்தான் தமிழ்நாடு தமிழருக்கே என்றும், தமிழ்நாடு நீங்கலான இந்திய தேசியப்படத்தை கொளுத்தினார். பெரியார் கூறிய திருமணம், குடும்பம் சம்பந்தமான கருத்துக்களில் எந்த அளவிற்கு பிடிவாதமாக இருந்தார் என்பது கேள்விக்குறியே ஆனால் அரசியல் ரீதியாக தமிழ்நாடு விடுதலையடைய வேண்டும் என்ற கருத்து பெரியாரின் இறுதி காலங்களில் மிக முக்கியமாக இருந்துள்ளது, ஆனால் அதை எவருமே இன்று செயல்படுத்த முன் வரவில்லை. எல்லோரும் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு அஞ்சி அடக்கமாக இருக்கிறார்களோ?

No comments: